/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஆவடியில் வரும் 20ல் ஏலம்
/
வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஆவடியில் வரும் 20ல் ஏலம்
வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஆவடியில் வரும் 20ல் ஏலம்
வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஆவடியில் வரும் 20ல் ஏலம்
ADDED : பிப் 17, 2025 01:32 AM
ஆவடி: வழக்குகளில் சிக்கிய வாகனங்கள், வரும் 20ம் தேதி, ஆவடி கமிஷனரக ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது.
ஆவடி போலீஸ் கமிஷனரகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு:
ஏலத்தில் எட்டு இருசக்கர வாகனம், இரண்டு மூன்று சக்கர வாகனம், இரண்டு நான்கு சக்கர வாகனம் என, மொத்தம், 12 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது.
ஏலம் கேட்க விரும்புவோர், இருசக்கர வாகனங்களுக்கு, 1,000 ரூபாய், மூன்று சக்கர வாகனங்களுக்கு, 2,000 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 5,000 ரூபாய் முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும்.
அதற்கான டோக்கன், அன்று காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை வழங்கப்படும். ஏலம் எடுத்தவர்கள், இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதமும், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு, 18 சதவீதமும் வரி செலுத்த வேண்டும்.
வாகன உரிமையாளர்கள் ஏலம் எடுக்க உரிய பதிவு சான்றையும், மற்றவர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஒன்றையும் கொண்டுவர வேண்டும். ஏலத்தில் பங்கேற்று, வாகனங்களை வாங்காதவர்களின் முன்வைப்பு தொகை, நிகழ்வின் முடிவில் திருப்பி தரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

