/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டாசு தீப்பொறியில் எரிந்து நாசமான ஆட்டோ
/
பட்டாசு தீப்பொறியில் எரிந்து நாசமான ஆட்டோ
ADDED : நவ 03, 2024 12:46 AM

புழல், புழல், புத்தகரத்தைச் சேர்ந்தவர் ராம்குமார், 38; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் இரவு 12:00 மணி அளவில், வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தி, துாங்கச் சென்றுள்ளார். அதிகாலை 2:00 மணி அளவில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்துள்ளது.
இவரது ஆட்டோவின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகேந்திரன், 35, என்பவருடைய ஆட்டோவும் தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் சேர்ந்து தீயை அணைக்க முயற்சித்தனர். தகவல் அறிந்த மாதவரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனால், ஒரு ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமானது; மற்றொரு ஆட்டோ சிறிய அளவிலான சேதத்துடன் தப்பியது.
இதுகுறித்து புழல் போலீசார் விசாரித்தனர். இதில், தீபாவளி பட்டாசு வெடித்ததில் தீப்பொறி ஆட்டோவின் மேல் விழுந்து எரிந்தது தெரியவந்தது.