/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் ஊழியர்களை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
/
பஸ் ஊழியர்களை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
ADDED : செப் 30, 2024 12:13 AM

புதுவண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை மாநகர பேருந்து பணிமனையில், அயப்பாக்கத்தைச் சேர்ந்த டில்லிபாபு 43 ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 22ம் தேதி, புது பேருந்துகளை குரோம்பேட்டையில் இருந்து எடுத்து வருவதற்காக, டில்லிபாபு உட்பட ஐந்து பேர் மாநகர பேருந்தில் சென்றுள்ளனர்.
புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே பேருந்து வந்தபோது, அவ்வழியே குறுக்கே ஆட்டோ நின்றது.
ஆட்டோவை எடுக்குமாறு ஓட்டுனர் கூற அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால், பேருந்து ஓட்டுனர்கள் இறங்கி கேட்ட போது, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. தடுக்க வந்த பேருந்து ஓட்டுனர்களையும், ஆட்டோ ஓட்டுனர் தாக்கினார்.
இது குறித்து கடந்த 26ம் தேதி, பேருந்து ஓட்டுனர் டில்லிபாபு கொடுத்த புகாரின்படி, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து சம்பவத்தில் ஈடுபட்ட திருவொற்றியூர், ராஜாஜி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் டில்லிபாபு, 34, என்பவரை நேற்று கைது செய்தனர்.