/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ டிரைவருக்கு தகாத உறவால் அடி, உதை
/
ஆட்டோ டிரைவருக்கு தகாத உறவால் அடி, உதை
ADDED : பிப் 15, 2024 12:57 AM
பெரம்பூர்,
அயனாவரம் ஏகாங்கிபுரத்தைச் சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரன், 46. ஆட்டோ ஓட்டுனரான இவர், பெரம்பூர் ரயில் நிலையம் பின்புறம் உள்ள மங்களாபுரம் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்துவது வழக்கம்.
ஆட்டோ ஸ்டாண்ட் அருகே பழரச கடை வைத்துள்ள பெண்ணுடன், கடந்த எட்டு ஆண்டுகளாக சாமுண்டீஸ்வரனுக்கு பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பெண்ணின் மகளுடைய காதலன் வினோத், 21, என்பவர், அப்பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இதுதொடர்பாக வினோத்திற்கும், சாமுண்டீஸ்வரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பெரம்பூரில் நேற்று காலை, இருவருக்கும் சண்டையாகி, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த சாமுண்டீஸ்வரன், பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், ஓட்டேரி காவல் நிலையத்தில் வினோத் மீது புகார் அளித்துள்ளார்.

