/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி பலி
/
ஆட்டோ ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : அக் 30, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போரூர், மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெண்ணிலா, 50. இவர், தன் மகள் மற்றும் பேத்தி ஆகியோருடன், கடந்த 16ம் தேதி, தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று, ஆட்டோவில் வீடு திரும்பினர்.
தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் அருகே வந்தபோது, சாலையோரம் இருந்த லாரியின் மீது ஆட்டோ மோதியது. இதில், வெண்ணிலா மற்றும் அவரது 4 வயது பேத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆட்டோவில் வந்த அவரது மகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ், நேற்று உயிரிழந்தார்.