/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுனர் பலி
/
அரசு பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுனர் பலி
ADDED : ஏப் 08, 2025 01:11 AM
தாம்பரம், மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் முருகன், 31; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் மாலை, நண்பர்கள் சுரேந்தர், சஞ்சய் ஆகியோருடன், மது அருந்தி விட்டு டி.வி.எஸ்., என்டார்க் ஸ்கூட்டரில், தாம்பரம், ராஜாஜி சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, தாம்பரத்தில் இருந்து குன்றத்துார் நோக்கி சென்ற தடம் எண்: 89டி அரசு பேருந்து பைக்கில் மோதியது. இதில், மூன்று பேரும் துாக்கி வீசப்பட்டனர். இதில், முருகன் தலையில் பலத்த காயமடைந்தார். மற்ற இருவரும் லேசான காயமடைந்தனர்.
போலீசார் விரைந்து, மூன்று பேரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் முருகன் இறந்தது தெரியவந்தது. மற்ற இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.