தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாணவியிடம் ஆபாச பேச்சு: ஆட்டோ ஓட்டுநர் கைது

மாணவியிடம் ஆபாச பேச்சு: ஆட்டோ ஓட்டுநர் கைது

மாணவியிடம் ஆபாச பேச்சு: ஆட்டோ ஓட்டுநர் கைது


UPDATED : அக் 15, 2026 08:35 PM

ADDED : அக் 15, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 08:35 PM ADDED : அக் 15, 2026 08:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவான்மியூர்: பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவியிடம், ஆபாசமாக பேசிய ஆட்டோ ஓட்டுநரை, போலீசார் கைது செய்தனர்

பெசன்ட் நகரை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, முதலாம் ஆண்டு படிக்கிறார். நேற்றுமுன்தினம், தோழியுடன் கல்லூரிக்கு செல்ல பெசன்ட் நகர் சர்ச் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், மாணவிகளை பார்த்து ஆபாசமாக பேசி, தவறாக அழைத்துள்ளார். இதில் மனமுடைந்த மாணவி, தாயாருடன் சென்று திருவான்மியூர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், வெட்டுவாங்கேணி, கெனால் பேங்க் சாலையை சேர்ந்த இளங்கோ, 38, என தெரிந்தது. நேற்று இவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us