தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை


UPDATED : அக் 15, 2026 08:34 PM

ADDED : அக் 15, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 08:34 PM ADDED : அக் 15, 2026 08:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டீக்கடை ஊழியரை தாக்கியவருக்கு வலை

அயப்பாக்கம்: அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள டீக்கடையில் பணிபுரிபவர் அன்சார், 35. நேற்று முன்தினம் காரில் வந்த நபர், டீக்கடையின் உள்ளே புகை பிடித்துள்ளார். இதை அன்சார் தட்டி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த மர்ம நபர், நண்பர்கள் இருவரை வரவழைத்து பாட்டிலால் தாக்கியுள்ளார். இதில், அன்சாருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. அயப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவில் கோபுர கலசங்கள் திருட்டு

எண்ணுார்: எண்ணுார், அன்னை சிவகாமி நகரில், பீலிக்கான் முனீஸ்வரர் – அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. நான்கு நாட்களுக்கு முன், கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், வராகி அம்மன் உள்ளிட்ட ஏழு சிறிய சன்னதிகளின் கோபுர கலசங்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து எண்ணுார் போலீசார் விசாரிக்கின்றனர். திருடு போன கலசங்களின் மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய்.

ஆட்டோ, ஸ்கூட்டர் திருடன்கள் பிடிபட்டனர்

தண்டையார்பேட்டை: பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது ஹபிஸ், 30, என்பவர், கடந்த 4ம் தேதி இரவு சவாரி முடித்து, கொருக்குப்பேட்டை, மகாராணி தியேட்டர் அருகே ஆட்டோவை நிறுத்தியிருந்தார். அப்போது ஆட்டோ திருட்டு போனது. விசாரித்த தண்டையார் பேட்டை போலீசார், திருட்டில் ஈடுபட்ட ராயபுரத்தை சேர்ந்த முருகன், 19, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

* திருவொற்றியூர், காலடிப்பேட்டை, பி.கே.என். காலனியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 57, என்பவரின் ஹோண்டா டியோ ஸ்கூட்டர், செப்., 20ம் தேதி இரவு திருட்டு போனது. விசாரித்த திருவொற்றியூர் போலீசார், திருட்டில் ஈடுபட்ட செம்மஞ்சேரியைச் சேர்ந்த கோட்டீஸ்வரன், 20, என்பவரை, நேற்று கைது செய்தனர்.

ஷூ திருடிய ‘செப்டோ’ ஊழியருக்கு வலை

டி.பி., சத்திரம்: கிழக்கு அண்ணா நகரைச் சேர்ந்த பிரின்ஸ் ஆப் ஸ்டாலின், 30, என்பவரது வீட்டிலிருந்து, நேற்று மதியம் 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ‘அடிடாஸ் ஷூ’வை திருடிச் சென்ற ‘செப்டோ’ ஊழியரை டி.பி., சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us