/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீடியனில் மோதி கவிழ்ந்த ஆட்டோ: ஓட்டுநர் பலி
/
மீடியனில் மோதி கவிழ்ந்த ஆட்டோ: ஓட்டுநர் பலி
ADDED : செப் 30, 2025 02:11 AM
ஆலந்துார்:ஜி.எஸ்.டி., சாலை மையத் தடுப்பில் மோதி ஆட்டோ கவிழ்ந்ததில், ஓட்டுநர் உயிரிழந்தார்.
பழைய பல்லாவரம், லிங்கம் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் பாரத், 51. இவர், வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று காலை மீனம்பாக்கம், ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலை மைய தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில், தலையில் பலத்த காயமடைந்த பாரத், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, மருத்துவர்களின் பரிசோதனையில், வரும் வழியிலேயே பாரத் உயிரிழந்தது தெரிய வந்தது. பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.