/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
1,000 மகளிருக்கு மானியத்தில் ஆட்டோ
/
1,000 மகளிருக்கு மானியத்தில் ஆட்டோ
ADDED : ஆக 09, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ.,மைதானத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், 100 மகளிருக்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய ஆட்டோக்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன், மத்திய சென்னை மாவட்ட செயலர் சிற்றரசு, தேனாம்பேட்டை மண்டலக்குழு தலைவர் மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆட்டோக்களை வழங்கி பேசிய துணை முதல்வர் உதயநிதி, நடப்பாண்டில், 1,000 மகளிருக்கு மானியத்தில் ஆட்டோக்கள் வழங்க தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசனுக்கு முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார்.