/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டண உயர்வு கோரி கோட்டை நோக்கி பேரணி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கைது
/
கட்டண உயர்வு கோரி கோட்டை நோக்கி பேரணி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கைது
கட்டண உயர்வு கோரி கோட்டை நோக்கி பேரணி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கைது
கட்டண உயர்வு கோரி கோட்டை நோக்கி பேரணி ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கைது
ADDED : ஏப் 24, 2025 12:13 AM

சென்னை, ஆட்டோ கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, கோட்டை நோக்கி பேரணி சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆட்டோ கட்டண உயர்வு, பைக் டாக்சிக்கு தடை, புதிய செயலியை துவங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர், சிவானந்தா சாலையில் நேற்று கூடினர்.
அங்கிருந்து, ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியம் தலைமையில், கோட்டை நோக்கி ஆட்டோக்களுடன் பேரணியாக சென்றனர். டாட்டா கம்யூனிகேஷன் அலுவலகம் அருகே சென்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 250 பேரில், 100 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்கள் கைது நடவடிக்கையை தவிர்த்து, அவரவர் ஆட்டோவை எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
விரைவில் தீர்வு
அமைச்சர் உறுதி
இதேபோல், தமிழ்நாடு ஆட்டோ கால்டாக்சி, ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், புதுப்பேட்டை அருகில் இருந்து எழும்பூர் வரை, கோரிக்கை பேரணி நடந்தது. எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டமைப்பின் தலைவர் ஜாஹிர் உசேன், நிர்வாகிகள் வெற்றிவேல், ராமநாதன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சங்க நிர்வாகிகளை, அமைச்சருடன் பேச்சு நடத்த போலீசார் அழைத்து சென்றனர். சங்க நிர்வாகிகளை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை சந்தித்து பேசினர்.
அப்போது, தங்கள் கோரிக்கைகளை நிர்வாகிகள் முன் வைத்தனர். முதல்வருடன் பேசி, ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடுவதாக, அமைச்சர் உறுதி அளித்ததாக, கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

