/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடி ஏ.வி.என்.எல்., சார்பில் சிறு குறு தொழில் கண்காட்சி
/
ஆவடி ஏ.வி.என்.எல்., சார்பில் சிறு குறு தொழில் கண்காட்சி
ஆவடி ஏ.வி.என்.எல்., சார்பில் சிறு குறு தொழில் கண்காட்சி
ஆவடி ஏ.வி.என்.எல்., சார்பில் சிறு குறு தொழில் கண்காட்சி
ADDED : மார் 21, 2025 12:33 AM

சென்னை ஆவடி, எச்.வி.எப். சாலையில், மத்திய அரசின் ஏ.வி.என்.எல்., என்ற கனரக வாகனங்கள் தயாரிப்பு தொழிற்சாலை, தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, போர் வாகன உற்பத்தி பொருட்களை, உள்நாட்டில் தயாரிக்க, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நேற்று நடந்தது.
ஏ.வி.என்.எல் இயக்குனர்கள் ராமச்சந்திரன், பிஸ்வரஞ்சன் பட்டநாயக், பிரவீன் குமார், அனுராக் குமார் சர்மா ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.
கண்காட்சியில் விசாகப்பட்டணம், நொய்டா, ஹரியானா, ஹைதராபாத், குஜராத், பஞ்சாப், கர்நாடகா, டில்லி, தமிழகம், கேரளா மாநிலத்தில் இருந்து, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன.
இதுகுறித்து, ஏ.வி.என்.எல் இயக்குனர் ராமச்சந்திரன் கூறியதாவது:
இந்தியாவில், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இணைந்து, அதிக அளவிலான போர் வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. வரும் 2047க்குள், 10 லட்சம் கோடி பொருளாதாரம் என்ற இலக்கை நாம் எட்ட முடியும்.
இந்தியாவில், ராணுவ வாகனங்கள் தரத்தை மேம்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும், சிறு குறு தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம்.
சிறு குறு தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தி, போர் வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரித்து, 2047க்குள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு, ஏ.வி.என்.எல். நிறுவனம் உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
★★★