/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விஜய் கட்சிக்கு ஆவடி மாநகராட்சி விளம்பரம்
/
விஜய் கட்சிக்கு ஆவடி மாநகராட்சி விளம்பரம்
ADDED : செப் 21, 2024 12:21 AM

சென்னை, செப். 21-
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை துவக்கியுள்ளார். இக்கட்சியின் முதல் மாநாடு, விழுப்புரத்தில் அடுத்த மாதம் 27ம் தேதி நடக்க உள்ளது. இந்த அறிவிப்பை, விஜய் நேற்று அறிக்கையாக வெளியிட்டார்.
இந்த அறிக்கை, நேற்று காலை ஆவடி மாநகராட்சியின் அதிகாரபூர்வ 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியானது.
ஒரு அரசுத்துறையே விஜய் மாநாட்டை வரவேற்று வெளியிட்ட அறிவிப்பு, சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியது. இந்த பதிவை, 10,000த்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்தனர்.
தகவலறிந்த ஆவடி மாநகராட்சியினர், பதறியடித்து ஐந்து மணி நேரத்திற்கு பின் அப்பதிவை அழித்தனர்.
ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''தவறுதலாக அப்பதிவு ஆவடி மாநகராட்சி 'எக்ஸ்' தளத்தில் வெளியாகிவிட்டது. எப்படி வெளியானது என தெரியவில்லை; விசாரிக்கிறோம்,'' என்றனர்.