/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க தனியாருடன் கைகோர்த்த ஆவடி மாநகராட்சி
/
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க தனியாருடன் கைகோர்த்த ஆவடி மாநகராட்சி
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க தனியாருடன் கைகோர்த்த ஆவடி மாநகராட்சி
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க தனியாருடன் கைகோர்த்த ஆவடி மாநகராட்சி
ADDED : மே 24, 2025 12:11 AM

ஆவடி :ஆவடி மாநகராட்சி பகுதிகளில், சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றன. அதை தடுக்கும் வகையில், அம்பத்துாரில் மாடு வளர்க்கும் 65 பேரை அழைத்து, சாலையில் மாடுகளை விடுவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் விபரித்தனர்.
இதனால், மாடுகளை சாலையில் விடுவது குறையவில்லை. மாடுகளை பிடிக்க சமீீபத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், 'ஈச்சர்' வாகனம் வாங்கப்பட்டுள்ளது.
தற்போது, மாடு பிடிக்கும் பணிக்காக, 'கௌராட்ஷா கமாண்டோ போர்ஸ்' என்ற தனியார் அமைப்பிடம், மாநகராட்சி கைகோர்த்துள்ளது.
அவர்கள், மாநகராட்சியின் வாகனம் வாயிலாக, வாரத்திற்கு நான்கு, ஐந்து முறை சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, காஞ்சிபுரத்தில் உள்ள கோசாலைக்கு அனுப்ப உள்ளனர்.
முதற்கட்டமாக நேற்று காலை முதல் மாலை வரை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, காமராஜர் நகரை சுற்றிய பகுதிகளில், மாடு பிடிக்கும் பணியில் தனியார் அமைப்பு ஈடுபட்டது. சாலையில் சுற்றித் திரிந்த, 11 மாடுகள் பிடிபட்டன. இவை, காஞ்சிபுரம் கோ சாலைக்கு அனுப்பபட்டன. இந்த மாடுகளுக்கு தலா, 10,000 ரூபாய் என, 1.10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
மீட்பது எப்படி?
மாட்டின் உரிமையாளர்கள் ஒவ்வொரு மாட்டிற்கும் மாநகராட்சிக்கு, 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். பின், மாநகராட்சி வழங்கும் ரசீது உடன், மாடு பிடிக்கும் அமைப்பினரை சந்திக்க வேண்டும்.
மாடு பிடித்த அமைப்பிற்கு, 2,000 ரூபாய்; தீவவனம் பராமரிப்பு கட்டணமாக ஒரு நாளைக்கு 300 ரூபாய் வீதம், கோசாலையில் மாடு அடைக்கப்பட்டு இருந்த நாட்களுக்கான கட்டணத்தையும் செலுத்தி, மாட்டை மீட்டுக் கொள்ளலாம் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதற்கு முன் பிடிப்பட்ட மாடுகள், திருமுல்லைவாயில், சோழம்பேடு சாலையில் உள்ள, மாட்டுத்தொழுவத்தில் அடைக்கப்பட்டு வந்தது. அபராத தொகை செலுத்தியபின், உரிமையாளர்களிடம் மாடு ஒப்படைக்கப்பட்டது.
***