/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவு கையாளும் முறை குறித்து ஆவடி மாநகராட்சி அறிக்கை
/
கழிவு கையாளும் முறை குறித்து ஆவடி மாநகராட்சி அறிக்கை
கழிவு கையாளும் முறை குறித்து ஆவடி மாநகராட்சி அறிக்கை
கழிவு கையாளும் முறை குறித்து ஆவடி மாநகராட்சி அறிக்கை
ADDED : ஜன 20, 2024 11:36 PM
சென்னை, ஆவடி மாநகராட்சியில் கழிவுகளை கையாளும் முறை குறித்து, பசுமை தீர்ப்பாயத்தில், ஆவடி மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருவள்ளூரைச் சேர்ந்த ராஜாமணி என்பவர், 'குப்பையை அறிவியல் முறையில் அகற்ற ஆவடி மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காற்று மாசு ஏற்படுகிறது.
இதை தடுக்க உத்தரவிட வேண்டும்' என, தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கில் ஆவடி மாநகராட்சி கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கை:
ஆவடி மாநகராட்சியில் தினமும் 10 டன் குப்பைகளை கையாளும் வள மீட்பு மையம் செயல்பாட்டில் உள்ளது. துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ், ஆறு இடங்களில் பொருள் மீட்பு வசதிகள் மற்றும் நுண் உரம் தயாரிக்கும் மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலை சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின், தொழில்நுட்ப வழிகாட்டுதல்படி, கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
குப்பை கிடங்குகளில் உள்ள கழிவுகளை முழுமையாக சுத்திகரித்து அகற்றும் பணிகள் எப்போது முடியும் என்பது குறித்து ஆணையரின் அறிக்கையில் தகவல் இல்லை.
எனவே, கழிவுகளை அகற்றுவதற்கான செயல்முறை, அதை முடிப்பதற்கான காலக்கெடு குறித்து ஆவடி மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் பிப்ரவரி 19ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

