/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை எவர்வின் பள்ளியில் விழிப்புணர்வு
/
இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை எவர்வின் பள்ளியில் விழிப்புணர்வு
இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை எவர்வின் பள்ளியில் விழிப்புணர்வு
இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை எவர்வின் பள்ளியில் விழிப்புணர்வு
ADDED : அக் 03, 2025 12:11 AM

பெரம்பூர், பெரம்பூர் எவர்வின் பள் ளி சார்பில், 'நம் நாட்டு பொருட்களையே வாங்கி பயன்படுத்த வேண்டும்' என்ற சுதேசிக் கொள்கையை வலியுறுத்தி, நேற்றுமுன்தினம் எவர்வின் பள்ளி குடும்பம் சார்பில், ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.
இதில், அப்பள்ளி குழுமம் பயன்படுத்தும் 110 பேருந்துகளையும், 'சுதேசி' என்ற ஆங்கில வார்த்தையில், எவர்வின் பள்ளி மைதானத்தில், 50,000 சதுர அடிபரப்பில் நிறுத்தி வைத்தனர்.
மாணவியர் முகத்தில் சுதேசி கொள்கையை வலியுறுத்தும் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், 'சுதேசி இன்று; சுயசார்பு நாளை, சுதேசியை தழுவு; நாட்டை வலுப்படுத்து, 'இந்திய நாடு நம்நாடு; இந்திய பொருட்களை நீ நாடு' என்ற முழக்கங்களை பதாகைகளாக ஏந்தி வந்தனர்.
ஆயுதபூஜை விழாவை முன்னிட்டு, பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் உதவி யாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், எவர்வின் பள்ளி சி.இ.ஓ., மகேஸ்வரி, மூத்த முதல்வர் புருஷோத்தம்மன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.