/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.ஐ.டி., தேசிய நீச்சல் போட்டி சென்னை மாணவியர் அசத்தல்
/
ஐ.ஐ.டி., தேசிய நீச்சல் போட்டி சென்னை மாணவியர் அசத்தல்
ஐ.ஐ.டி., தேசிய நீச்சல் போட்டி சென்னை மாணவியர் அசத்தல்
ஐ.ஐ.டி., தேசிய நீச்சல் போட்டி சென்னை மாணவியர் அசத்தல்
ADDED : அக் 02, 2025 10:42 PM
சென்னை,ஐ.ஐ.டி., தேசிய நீச்சல் போட்டியில், சென்னை மாணவியர் அபார வெற்றி பெற்றனர்.
ஹைதராபாத், திருப்பதி ஐ.ஐ.டி.,களுடன் சென்னை ஐ.ஐ.டி., இணைந்து, நாட்டில் உள்ள அனைத்து ஐ.ஐ.டி.,களுக்கும் இடையே, 39வது தேசிய நீச்சல் போட்டியை நடத்துகிறது.
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடந்த முதல் நாள் போட்டி முடிவில், மாணவியர் 50 மீ., 'பேக்ஸ்ட்ரோக்' பிரிவில், சென்னை ஐ.ஐ.டி.,யின் ஆஷ்னா அஷ்வின் மாதுார் போட்டி துாரத்தை, 35.46 வினாடியில் கடந்து 5 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து அசத்தினார்.
பாட்னா ஐ.ஐ.டி., மாணவி மான்யா மனோஜ் அகர்வால் 41.76 வினாடியில் கடந்து, இரண்டாவது இடத்தை பிடித்தார்.
அடுத்து நடந்த மகளிர் 100 மீ., 'ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' போட்டியில், சென்னை ஐ.ஐ.டி.,யின் ஸ்கார்லெட் எஸ்தர் பெர்னாண்டஸ் போட்டி துாரத்தை, 1.43.08 நிமிடத்தில் நிறைவு செய்து, இரண்டாம் இடத்தை பிடித்தார். போட்டி துாரத்தை 1.40.90 நிமிடத்தில் நிறைவு செய்த, காரக்பூர் ஐ.ஐ.டி., மாணவி ஸ்ருஷ்டி சாந்தோர்கர் முதல் இடத்தை பிடித்து அசத்தினார்.