/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
‛விவிபேட்' இயந்திர பயன்பாடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
/
‛விவிபேட்' இயந்திர பயன்பாடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
‛விவிபேட்' இயந்திர பயன்பாடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
‛விவிபேட்' இயந்திர பயன்பாடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : பிப் 07, 2024 12:44 AM

சென்னை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டளிக்கும் பதிவை வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ள உதவும் வகையில், ‛விவிபேட்' இயந்திரத்தை, சில ஆண்டுகளுக்கு முன், இந்திய தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்தது.
லோக்சபா தேர்தல் நெருங்குவதால், சென்னை மாநகராட்சி சார்பில், ‛விவிபேட்' குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி துவங்கியுள்ளது.
மண்டலம் வாரியாக, மக்கள் கூடும் இடங்களில், மாதிரி ஓட்டுப்பதிவு மையம் அமைக்கப்படுகிறது. இதில், மக்களை ஓட்டளிக்க செய்து, அதை ‛விவிபேட்' இயந்திரத்தில் பார்க்க வைக்கின்றனர். பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு, பணியில் உள்ள ஊழியர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
அதேபோல், வாகனங்களில் மாதிரி ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, முக்கிய பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தியும், நலச்சங்கங்கள் வழியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு நாள் வரை, இந்த பணி தொடர உள்ளது.