/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உறுப்பு தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம்
/
உறுப்பு தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம்
உறுப்பு தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம்
உறுப்பு தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம்
ADDED : ஆக 18, 2025 02:52 AM
குரோம்பேட்டை:உறுப்பு தானத்தை வலியுறுத்தி, ரேலா மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நடைபயணத்தில், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், ஆக., 13ம் தேதி, உலக உறுப்பு தானம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை சார்பில், உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும், விழிப்புணர்வை உயர்த்தவும் மற்றும் உறுப்பு தான வாக்குறுதியை வழங்க மக்களை துாண்டவும், விழிப்புணர்வு நடைபயணம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், கல்லுாரி மாணவ - மாணவியர், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உட்பட, 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தாம்பரம் போக்குவரத்து துணை கமிஷனர் சமாய் சிங் மீனா, ரேலா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் கவுதமன், தலைமை இயக்க அதிகாரி முகமது பரூக் ஆகியோர் இணைந்து, நடைபயணத்தை துவக்கி வைத்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் துவங்கிய விழிப்புணர்வு நடைபயணம், 5 கி.மீ., துாரம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மருத்துவமனை வளாகத்தில், எந்த நேரத்திலும் தானமளிப்பவர்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்யலாம் என, நிர்வாகம் அறிவித்துள்ளது.