/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லாததால் சோழிங்கநல்லுாரில் தொடரும் குடிநீர் பற்றாக்குறை மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

ADDED : ஆக 18, 2025 02:54 AM
சோழிங்கநல்லுார்:'சோழிங்கநல்லுார் மண்டலத்தில், வடிகால்வாய், குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகளை செய்வதில், மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், குடிநீர் பற்றாக்குறை தொடர்கிறது' என, கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.
சோழிங்கநல்லுார் மண்டல குழு கூட்டம், மண்டல அதிகாரி தணிகைவேல் முன்னிலையில், மண்டல தலைவர் மதியழகன் தலைமையில், நேற்று நடந்தது.
அதில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
கோவிந்தசாமி, அ.தி.மு.க., 193வது வார்டு: துரைப்பாக்கத்தில் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படுவதால், பருவமழைக்கு முன் விடுபட்ட பணிகளை முடிக்க வேண்டும்.
ஏகாம்பரம், தி.மு.க., 195வது வார்டு: குமரன்குடில் நகரில் வடிகால்வாய் கட்ட பள்ளம் எடுத்து இரண்டு மாதமாகியும், பணி துவங்காததால், மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.
மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணி செய்யாததால், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அஸ்வினி, அ.தி.மு.க., 196வது வார்டு: மழைநீர் வடிகால்வாய்களில், முழுமையாக துார்வார வேண்டும். சமூக நலவாழ்வு மையத்தில் மருத்துவர் இல்லாததால், மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
மேனகா, அ.தி.மு.க., 197வது வார்டு: உத்தண்டி முதல் அக்கரை வரை, முறையாக குப்பை அகற்றப்படுவதில்லை. கொசு மருந்து அடிப்பதில்லை. வசதி படைத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் முக்கியத்துவம் கொடுக்கும் அதிகாரிகள், ஏழைகள் வசிக்கும் பகுதியை புறக்கணிக்கின்றனர்.
லியோ சுந்தரம், பா.ஜ., 198வது வார்டு: கவுன்சிலர் நிதியை முறையாக பயன்படுத்த மதிப்பீடு
தயாரிக்காத வார்டு உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளரை மாற்ற வேண்டும்.
சங்கர், தி.மு.க., 199வது வார்டு: வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வினியோகிக்கப்படும் குடிநீர் துர்நாற்றம் வீசுகிறது. குழாய் பதிக்க தோண்டிய சாலைகளை சீரமைப்பது, மாநகராட்சியா, குடிநீர் வாரியமா என, பதில் கூற வேண்டும்.
முருகேசன், தி.மு.க., 200வது வார்டு: வார்டில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமாக இல்லை. செம்மஞ்சேரியில் தெரு தொட்டிகளில் முறையாக லாரி குடிநீர் வினியோகிப்பதில்லை. சுனாமி நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
இதற்கு, அந்தந்த துறை அதிகாரிகள் பதில் கூறினர். தொடர்ந்து, சாலை வடிகால், தெருப்பலகை உள்ளிட்ட பணிகளுக்காக, 154 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.