/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் நிலையத்தில் தவித்த அயனாவரம் சிறுமி மீட்பு
/
பஸ் நிலையத்தில் தவித்த அயனாவரம் சிறுமி மீட்பு
ADDED : ஜன 09, 2024 12:39 AM

அயனாவரம், அயனாவரம் பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, 6 வயது சிறுமி அழுதுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், சிறுமியை மீட்டு விசாரித்ததில், அவர் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இதையடுத்து, சிறுமியை புகைப்படம் எடுத்து, 'வாட்ஸாப்' குழுக்களில் பதிவிட்டனர்.
அப்போது, அயனாவரம் பகுதியில் இருந்து சிறுமியின் பெற்றோர், போலீசாரை தொடர்பு கொண்டனர். விசாரணையில், அதேபகுதியில் உள்ள பொன்வேல்புரத்தைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா, 27, மற்றும் அவரது மனைவி அசியானா ஆகியோரின் மகள் அப்சா, 6, என்பது உறுதியானது. பெற்றோரை அழைத்து விசாரித்து போது, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, வழி தவறி சென்றது தெரிந்தது. அயனாவரம் உதவி கமிஷனர் முத்துக்குமார் முன்னிலையில், சிறுமியை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.