ADDED : அக் 13, 2025 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேரோட்டம் கோலாகலம்
மணலிபுதுநகர்: மணலி புதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில், புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா, கடந்த 3ம் தேதி துவங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேரோட்டம் நேற்று மதியம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 36 அடி உயர திருத்தேரை, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் நாராயணன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். அதில், அய்யா வைகுண்ட தர்மபதி எழுந்தருளி வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.