/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில வாலிபால்: 88 அணிகள் பலப்பரீட்சை
/
மாநில வாலிபால்: 88 அணிகள் பலப்பரீட்சை
ADDED : அக் 13, 2025 05:13 AM
சென்னை: மாநில அளவிலான வாலிபால் போட்டியில், இருபாலரிலும் மொத்தம் 88 மேற்பட்ட அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
லயன்ஸ் கிளப் ஆப் அண்ணா நகர், சாந்தோம் பள்ளி இணைந்து, சர்வதேச லயன்ஸ் கிளப் நிறுவனரான மெல்வின் ஜோன்ஸ் பெயரில், பள்ளிகளுக்கு இடையிலான மாநில வாலிபால் போட்டியை, மயிலாப்பூரில் நடத்தி வருகின்றன.
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, இருபாலரிலும் மொத்தம் 51 ஆண்கள் உட்பட, 88 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று முன்தினம் துவங்கிய முதல் நாள் போட்டியை, லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் போஸ் உள்ளிட்டோர் துவங்கி வைத்தனர்.
மாணவருக்கான போட்டியில், மெல்ரோசாபுரம் சி.எஸ்.ஐ., அணி, 15 - 25, 25 - 22, 16 - 6 என்ற செட் கணக்கில், டாக்டர் பி.எம்.எஸ்., பள்ளியை தோற்கடித்தது.
பி.ஏ.கே., அணி, 25- 8, 25 - 8 என்ற செட் கணக்கில் சி.எம்.எஸ்., பள்ளியையும், மான்போர்ட் பள்ளி, 25 - 20, 15 - 25, 26 - 24 என்ற செட் கணக்கில் நவஜோதியும் பள்ளியை தோற்கடித்தன.
போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.