/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்கலை வாலிபால் சாய்ராம் கல்லுாரி முதலிடம்
/
பல்கலை வாலிபால் சாய்ராம் கல்லுாரி முதலிடம்
ADDED : அக் 13, 2025 05:14 AM

சென்னை: அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளை, 20க்கும் மேற்பட்ட மண்டலங்களாக பிரித்து, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.
அந்த வகையில், நான்காவது மண்டல ம களிர் வாலிபால் போட்டி, மேடவாக்கம் நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி கல்லுாரியில், நேற்று முன்தினம் நடந்தது.
போட்டியில், சாய்ராம், தாகூர், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை, பெரி, நியூ பிரின்ஸ், எம்.ஐ.டி., உள்ளிட்ட 10 அணிகள், நாக் அவுட் முறையில் மோதின.
அனைத்து போட்டிகள் முடிவில், சாய்ராம் - எம்.ஐ.டி., கல்லுாரி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், 25 - 15, 25 - 21 என்ற செட் கணக்கில், சாய்ராம் கல்லுாரி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்து கோப்பையை வென்றது.
அதை தொடர்ந்து, எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை மற்றும் ஆதி பொறியியல் கல்லுாரி அணிகள் முறையே, மூன்று மற்றும் நான்காம் இடங்களை கைப்பற்றின.