/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேக்கரி தினை உணவு தயாரிப்பு 4 நாள் பயிற்சி
/
பேக்கரி தினை உணவு தயாரிப்பு 4 நாள் பயிற்சி
ADDED : ஜன 22, 2025 12:52 AM
சென்னை,தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வாயிலாக, தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 28 முதல் 31ம் தேதி வரை நடக்கவுள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை பயிற்சி நடக்கும்.
ராகி நெய் குக்கீ, சத்துமாவு குக்கீ, கோதுமை தேங்காய் குக்கீ, தினை, கம்பு, வரகு, முந்திரி, சாமை, சோளம், பிஸ்தா, ஜீரா குக்கீ ஆகியவற்றை தயாரிப்பது குறித்தும் இதேபோல, பிரவுனி, சாக்லெட் கேக் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், முழு கோதுமை ரொட்டி, பழ ரொட்டி, ராகி தினை ரொட்டி, பல தானிய ரொட்டி, ராகி சாக்கோ ரொட்டி ஆகியவற்றை தயாரிக்கவும் பயிற்சி அளிக்கப்படும்.
தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்துதலின் அம்சங்கள், பேக்கிங், லேபிளிங் மற்றும் அதற்கான விலை வழிமுறைகள் ஆகியவை குறித்தும் கற்றுத்தரப்படும். இதற்கு அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்தும் விளக்கப்படும்.
பயிற்சியில் ஆர்வமுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை www.editn.in என்ற வலைதளத்தில் அறியலாம். விபரம், முன்பதிவு செய்ய, 8668102600, 7010143022 என்ற எண்களை அழைக்கலாம்.