/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளம்பெண்ணை ஏமாற்றிய 'பலே' கணக்காளர் கைது
/
இளம்பெண்ணை ஏமாற்றிய 'பலே' கணக்காளர் கைது
ADDED : ஜன 01, 2024 01:54 AM
அண்ணா நகர்:அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது பெண்; தனியார் நிறுவன ஊழியர். இவர், அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் ஒரு புகார் அளித்தார்.
புகார் மனுவில் கூறியதாவது:
'இன்ஸ்டாகிராம்' வாயிலாக, நடிகர் விஜயின் கணக்காளர் எனவும், விஜயுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருந்த ராஜேஷ் என்பவர், என் தோழி வாயிலாக பழக்கமானார்.
ராஜேஷ் தனக்கு திருமணமானதை மறைத்து, என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.
பத்து லட்சம் ரூபாய் வரை என்னிடம் வாங்கியுள்ளார். அவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பது தெரிந்து கேட்ட போது, என்னை மிரட்டினார். ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
புகாரின்படி, அண்ணா நகர் மகளிர் போலீசார், பெண் வன்கொடுமை உட்பட இரு பிரிவுகளின் கீழ், கடந்த நவ., மாதம் வழக்கு பதிந்தனர். ஆனால், ராஜேஷ் கைது செய்யப்படவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார், தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட ஆலந்துாரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
விசாரணையில் இவர், நடிகர் விஜயின் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வருவது தெரிந்துள்ளது. இது தொடர்பாக ராஜேஷிடம் மேலும் விசாரிக்கின்றனர்.