ADDED : டிச 31, 2024 12:41 AM
ஓட்டேரி,
ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் இம்தியாஸ், 48. இவர், பழைய பைக் வாங்கி விற்று வருகிறார். கடந்த 27ம் தேதி, இவரது 'பஜாஜ் பல்சர்' ரக பைக்கை, மேடவாக்கம் டேங்க் சாலையில் உள்ள ராயல் என்பீல்டு ஷோரூம் அருகே நிறுத்தியிருந்தார்.
மறுநாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவமனைக்கு சென்று வீட்டிலேயே ஓய்வு எடுத்துள்ளார்.
நேற்று பைக்கை எடுக்கச் சென்ற போது, பைக் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து, தலைமை செயலக காலனி போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசார், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில், தஞ்சாவூரைச் சேர்ந்த ஜுரியஸ், 30, என்பவர் சிக்கினார். அவரை, போலீசார் அயனாவரம் சிக்னல் அருகே மடக்கி கைது செய்து, பைக்கை மீட்டனர்.
பிடிபட்ட ஜுரியஸ், கடந்த 2023ல் திருவான்மியூர் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.