ADDED : பிப் 11, 2025 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லிவாக்கத்தில் அமைந்துள்ளது தேவி பாலியம்மன் கோவில். நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு பாலாலயம் செய்து, திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிந்த நிலையில், நேற்று, கும்ப நீர் கோபுர கலசங்களில் சேர்த்து, மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
வில்லிவாக்கம், தேவி பாலியம்மன் கோவில் உபயதாரர் நிதி, 2.60 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. இரு நாட்களில், 76 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.