/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சோதனையில் சிக்கிய வழிப்பறி திருடர்கள்
/
சோதனையில் சிக்கிய வழிப்பறி திருடர்கள்
ADDED : பிப் 03, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேற்காடு, திருவேற்காடு போலீசார், நேற்று முன்தினம் இரவு வானகரம் மீன் மார்க்கெட் அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, கே.டி.எம்., ரக அதிவேக பைக்கில் வந்தவர்களை சோதனை செய்ததில், ஐந்து மொபைல் போன்கள், 1 அடி நீள கத்தி சிக்கியது. விசாரணையில், குன்றத்துாரைச் சேர்ந்த அஸ்வாக், 21, செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.
இவர்கள், தனியாக சிக்குவோரிடம் கத்திமுனையில் மொபைல் போன், பணம் உள்ளிட்ட வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

