ADDED : டிச 31, 2025 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி: சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் நேற்று பல்வேறு இடங்களில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக ஆவடி, நியூ மிலிட்டரி சாலை, ஆவடி அரசு மருத்துவமனை அருகே, இந்தியன் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உட்பட பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வாரத்தில், ஐந்து நாட்கள் மட்டுமே பணி நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

