/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரைம் கார்னர் -- வெளிநாட்டு மது விற்ற 2 பேர் கைது
/
கிரைம் கார்னர் -- வெளிநாட்டு மது விற்ற 2 பேர் கைது
கிரைம் கார்னர் -- வெளிநாட்டு மது விற்ற 2 பேர் கைது
கிரைம் கார்னர் -- வெளிநாட்டு மது விற்ற 2 பேர் கைது
ADDED : டிச 31, 2025 05:19 AM

அடையாறு: அடையாறு, கார்னெட் சந்திப்பில், வெளிநாட்டு மதுபானங்களை விற்ற மயிலாப்பூரைச் சேர்ந்த வீரமணிகண்டன், 48, இளஞ்செழியன், 54, ஆகிய இருவரை, போலீசார் நேற்று கைது செய்து விசாரித்தனர். இவர்கள், வெளிநாட்டில் இருந்து சென்னை வருவோரிடம், மதுபாட்டில்களை வாங்கி, அதிக விலைக்கு விற்றது தெரிந்தது. அவர்களிடம் இருந்து, 34 வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
5 சவரன் நகைகள் வீடு புகுந்து திருட்டு
சித்தாலப்பாக்கம்: வேளச்சேரி அடுத்த சித்தாலப்பாக்கம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த அம்புலி நம்பி. வெளியூரில் இவர் வசிக்கும் நிலையில், இவரது வீட்டின் கதவு நேற்று முன்தினம் உடைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து சென்றபோது, வீட்டின் மூன்று பீரோக்களும் உடைக்கப்பட்டு, 5 சவரன் தங்க நகைகள் திருடுபோனது தெரிந்தது. பெரும்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராடால் தாக்கிய வழிப்பறி வாலிபர் சிக்கினார்
செம்மஞ்சேரி: பீஹாரைச் சேர்ந்தவர் ஜமால், 25. ஓ.எம்.ஆர்., நுாக்கம்பாளையம் சாலையில் கட்டுமான பணி செய்து, அங்கேயே தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு, டிபன் வாங்கி பணித்தளம் நோக்கி நடந்து சென்றபோது, குமரன் நகர், 'டாஸ்மாக்' அருகில் போதையில் வந்த நபர், இரும்பு ராடால் ஜமாலை தாக்கி, அவர் பாக்கெட்டில் வைத்திருந்த, 500 ரூபாயை பறித்து சென்றார். காயமடைந்த ஜமால், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விசாரித்த செம்மஞ்சேரி போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட தையூரைச் சேர்ந்த விஷ்ணு, 21, என்பரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
250 கிலோ பிளாஸ்டிக் அடையாறில் பறிமுதல்
அடையாறு: அடையாறு, காமராஜர் சாலை, கிரீன்வேஸ் சாலைகளில் உள்ள கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்தன. மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மாநகராட்சியும் இணைந்து, அப்பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 250 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

