தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பதவி உயர்வு பெற்றும் 28 அதிகாரிகள் பரிதவிப்பு உள்ளதும் போச்சு! வேலையிலும் சேர முடியலை; சம்பளமும் ரத்தாச்சு:மாநகரில் மழை முன்னெச்சரிக்கை பணி தொய்வு

பதவி உயர்வு பெற்றும் 28 அதிகாரிகள் பரிதவிப்பு உள்ளதும் போச்சு! வேலையிலும் சேர முடியலை; சம்பளமும் ரத்தாச்சு:மாநகரில் மழை முன்னெச்சரிக்கை பணி தொய்வு

பதவி உயர்வு பெற்றும் 28 அதிகாரிகள் பரிதவிப்பு உள்ளதும் போச்சு! வேலையிலும் சேர முடியலை; சம்பளமும் ரத்தாச்சு:மாநகரில் மழை முன்னெச்சரிக்கை பணி தொய்வு


UPDATED : செப் 16, 2026 06:02 PM

ADDED : செப் 16, 2026 03:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2026 06:02 PM ADDED : செப் 16, 2026 03:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

சென்னை மாநகராட்சியில் பணியாற்றி பதவி உயர்வு பெற்ற, 100 செயற்பொறியாளர்களில், 28 பேர் வேலையில் சேர முடியாமலும், பழைய பணியிடத்திற்கும் திரும்ப முடியாமலும் பரிதவித்து வருகின்றனர். பதவி உயர்வுக்கு எதிராக சிலர் நீதிமன்றம் சென்றதால், இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் உதவி செயற்பொறியாளர் இல்லாததால், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரிந்த, 116 உதவி செயற்பொறியாளர்களுக்கு, செயற்பொறியாளர்களாக, ஆக., 4ல் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இவர்களில், 100 பேர் சென்னை மாநகராட்சியை சேர்ந்தவர்கள்; 16 பேர் இதர மாநகராட்சி, நகராட்சிகளை சேர்ந்தவர்கள்.

சென்னையில் உள்ள 100 பேரில், 45 பேர் சென்னை மாநகராட்சியிலேயே பதவி உயர்வுடன் பணி கிடைத்தது. மேலும், 55 பேர் இதர மாநகராட்சி, நகராட்சிகளுக்கு மாற்றப்பட்டனர்.

இவர்களுக்கு, ஆக., 8ம் தேதி இரவு, பணி விடுவிப்பு ஆணை வழங்கப்பட்டது. சென்னை, தாம்பரம், ஆவடி மற்றும் அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் ஆக., 10ம் தேதி காலை 11:00 மணிக்குள், 72 பேர் பணியில் சேர்ந்தனர்.

மீதமுள்ள, 28 பேர், சென்னையில் இருந்து, திருச்சி, மதுரை, கொடைக்கானல் உள்ளிட்ட தொலை துாரத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சியில் பணியில் சேர சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், பதவி உயர்வு பாதிக்கப்பட்டதாக கூறி, இதர உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த சில உதவி செயற்பொறியாளர்கள், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததையடுத்து, அன்றைய தினமே பதவி உயர்வுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது.

இதைத்தொடர்ந்து, பணியில் சேர இருந்த செயற்பொறியாளர்களை ஏற்க வேண்டாம் என, நகராட்சி நிர்வாகத்துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதனால், பணிக்கு சேர சென்ற, 28 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இவர்கள், புதிய பணியிடங்களில் சேர முடியாமலும், பணியில் இருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டதால், ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் அதே பணியில் தொடர முடியாமலும் நிர்கதியாக உள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுக்குபின், பணியில் சேர்ப்பதாக மாநகராட்சி கூறியதால், 28 பேருக்கு ஆகஸ்ட் மாதம் ஊதியம் கிடைக்கவில்லை. வேலையும் இல்லை; சம்பளமும் இல்லை என்ற நிலையில், நாம் அரசு பணியில் தான் இருக்கிறோமா என்ற குழப்பத்தில் அவர்கள் பதவிப்புடன் உள்ளனர்.

பணியில் சேர்ந்த மீதமுள்ளவர்களுக்கு, பதவி உயர்வுக்கா சம்பளம் வழங்கப்படாமல், ஏற்கனவே பணி புரிந்த உதவி செயற்பொறியாளர் பதவிக்கான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

திணறல்

இது ஒருபுறமிருக்க, மொத்தம் 100 பேருக்கு பதவி உயர்வு வழங்கியதால், 15 மண்டலங்களிலும் உதவி செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனால், இளநிலை பொறியாளர்களுக்கு, உதவி செயற்பொறியாளர் பணி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. ஒருவர் இரண்டு, மூன்று பணிகளை கூடுதலாக பார்க்க முடியாமல் திணறுகின்றனர்.

பருவமழை நெருங்கும் நிலையில், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிப்பது, மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது, சாலை சீரமைப்பு போன்ற பணிகள் உள்ளன.

அனைத்து மண்டலங்களிலும், பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் சிறப்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதால், பொறியாளர்கள் விறுவிறுப்பாக பணி செய்ய வேண்டி உள்ளது. பொறியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, பருவமழையை எதிர்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பணி இல்லாமல் வெளியில் உள்ள அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில், 30 ஆண்டுக்கு மேலாக பணி புரிந்து, படிப்படியாக செயற்பொறியாளர் பதவி உயர்வு கிடைத்தது. பதவி உயர்வு வழங்கியதும், மாநகராட்சி எங்களை விடுவித்தது.

இதர மாநகராட்சிகளில் நீதிமன்ற தடையை கூறி எங்களை ஏற்கவில்லை. இதனால், பணியின்றி உள்ளோம். ஆகஸ்ட் மாத சம்பளமும் கிடைக்காததால், வங்கி கடன் உள்ளிட்ட தேவைகளை சம்மாளிக்க முடியாமல் திணறுகிறோம்.

பதவி உயர்வு வழங்கியபோது, நண்பர்கள், குடும்பத்தினருக்கு இனிப்பு வழங்கி தகவல் தெரிவித்தோம். பணி இல்லாத தகவல் அவர்களுக்கு தெரியாத வகையில், தினமும் வேலைக்கு செல்வதாக கூறி வெளியில் சுற்றுகிறோம்.

நீதிமன்ற உத்தரவு வரும் வரை நாங்கள் ஏற்கனவே பார்த்த, உதவி செயற்பொறியாளர் பணியிடத்தை வழங்கும் வகையில், நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்பதால், 28 பேருக்கு எங்களால் ஊதியம் வழங்கி, பணியில் சேர்க்க முடியவில்லை. வழக்கை விரைந்து முடிக்க சட்டத்துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

நிபந்தனையுடன் கூடுதல் பொறுப்பு பதவி உயர்வு பாதிப்பதாக சிலர் நீதிமன்றத்தை நாடுவதால், நிர்வாக குளறுபடி, நீதிமன்ற அவமதிப்பு போன்ற சிக்கல்கள் மாநகராட்சிக்கு ஏற்படுகிறது. சில வழக்குகளில், கமிஷனர் நீதிமன்றம்முன் ஆஜராக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மாநகராட்சியில் ஓய்வூதியம், பொதுத்துறை, மின் துறை, நிதி குழுமம், கணக்கு குழுமம் ஆகிவற்றில் காலியாக இருந்த முதுநிலை கணக்கு அலுவலர் பணியிடங்களில், நிர்வாக அலுவலராக பணி புரியும் பட்டதாரிகளுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கி, கமிஷனர் சமீரன் உத்தரவு பிறப்பித்தார். உத்தரவில், 'கூடுதல் பொறுப்புக்காக படி ஏதும் வழங்க இயலாது; முதுநிலை கணக்கு அலுவலர் பதவி உயர்வு மற்றும் பணி மூப்பு அடிப்படையில், முன்னுரிமை வழங்க இயலாது' என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us