/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அசோக்நகரில் அதிகாரிகள் அலட்சியத்தால் நடைபாதையை ஆக்கிரமிக்கும் பேனர்கள்
/
அசோக்நகரில் அதிகாரிகள் அலட்சியத்தால் நடைபாதையை ஆக்கிரமிக்கும் பேனர்கள்
அசோக்நகரில் அதிகாரிகள் அலட்சியத்தால் நடைபாதையை ஆக்கிரமிக்கும் பேனர்கள்
அசோக்நகரில் அதிகாரிகள் அலட்சியத்தால் நடைபாதையை ஆக்கிரமிக்கும் பேனர்கள்
ADDED : ஆக 17, 2025 12:55 AM

சென்னை, மாநகராட்சி மற்றும் போலீசாரின் அலட்சியத்தால் தான், அசோக் நகர் முழுதும் நடைபாதையை ஆக்கிரமித்து, மக்களுக்கு இடையூறாக வி.சி.க.,வினர் பேனர்கள் வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை நகரின் முக்கியமான பகுதியாக அசோக் பில்லர் உள்ளது.
இச்சாலையில், அசோக் நகர் மெட்ரோ நிலையம், தீயணைப்பு துறை மற்றும் அஞ்சல் அலுவலகம், கே.வி., பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட ஏராளமான கல்வி மற்றும் அரசு நிறுவனங்கள் உள்ளன.
எந்நேரமும் மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து மிகுந்த இப்பகுதியில், நடைமேடையை, ஆக்கிரமித்து வி.சி., கட்சியினர் ஆங்காங்கே பேனர் அமைத்து உள்ளனர். இதனால் பொதுமக்கள் வேறு வழியின்றி, நெரிசல் மிகுந்த பகுதியில் சாலையில் நடந்து செல்ல வேண்டிய அபாயம் உள்ளது. இந்த பேனர்களால், சிறு விபத்துகள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் இடையே தகராறுகள் ஏற்படுகின்றன.
சமீபத்தில் கூட அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பேனர்கள் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை அகற்ற வேண்டும். இந்த விஷயத்தில், கடமை தவறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது , துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கையை உயரதிகாரிகள் எடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், உத்தரவை காற்றில் பறக்க விட்டு, மாநகராட்சி மற்றும் போலீசார் கட்சி பேனர்களை கண்டும்காணாதது போன்று அலட்சியமாக இருப்பது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.