/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொக்லைன் இயந்திரங்களின் பேட்டரி திருட்டு
/
பொக்லைன் இயந்திரங்களின் பேட்டரி திருட்டு
ADDED : ஏப் 03, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயல், மதுரவாயல், ஆலப்பாக்கம் விவேகானந்தர் சாலையில், எம்.எல்.ஏ., அலுவலகம், மாநகராட்சி வார்டு அலுவலகம், சமூக நலக்கூடம் ஆகியவை உள்ளன.
சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த பணியில் ஈடுபடுத்தப்படும் இரு பொக்லைன் இயந்திரங்கள், இச்சாலையோரம் நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த இயந்திரங்களில் இருந்து இரு பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடியுள்ளதாக, அவற்றின் ஓட்டுனர்கள், மதுரவாயல் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.