/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழல் மத்திய சிறையில் கைதிகளிடையே அடி, தடி
/
புழல் மத்திய சிறையில் கைதிகளிடையே அடி, தடி
ADDED : ஆக 23, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த செல்வம் என்கிற கைதியை, அதே சிறையில் உள்ள கணேஷ், ரபிக், திவாகர், ராகுல் ஆகியோர், முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளனர்.
செல்வத்தின் அலறல் சத்தத்தை கேட்டு சென்ற சிறைக்காவலர்கள், அவரை மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அதேபோல், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சக்தி என்கிற கைதியை, நரேன்ராஜ் என்கிற மற்றொரு கைதி சரமாரியாக தாக்கியுள்ளார்.
சிறைக்காவலர்கள் சக்தியை, சிறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும், சிறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்படி, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.