/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுவை கைவிட்டு திருந்திய நண்பனுக்கு பீர் பாட்டில் அடி
/
மதுவை கைவிட்டு திருந்திய நண்பனுக்கு பீர் பாட்டில் அடி
மதுவை கைவிட்டு திருந்திய நண்பனுக்கு பீர் பாட்டில் அடி
மதுவை கைவிட்டு திருந்திய நண்பனுக்கு பீர் பாட்டில் அடி
ADDED : ஆக 16, 2025 01:29 AM
புளியந்தோப்பு மது பழக்கத்தை விடுத்து வேலைக்கு சென்று திருந்தி வாழ்ந்த நண்பனை தாக்கிய, 'பாசக்கார' நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
புளியந்தோப்பை சேர்ந்தவர் சுமன், 40. ஆட்டோ ஓட்டுநர். இவரது மூத்த மகன் சுதாகர், 18. நேற்று முன்தினம் இரவு, புளியந்தோப்பு சிவராஜபுரம் முண்டக்கண்ணியம்மன் கோவில் தெருவில் வந்த போது, சுதாகருக்கும் அவரது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், அஜய் என்பவர் நான்கு பேருடன் சேர்ந்து, பீர் பாட்டிலால் சுதாகர் தலையில் தாக்கினார். இதில் காயமடைந்த சுதாகர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு தலையில் ஏழு தையல் போடப்பட்டது.
இதுகுறித்து, சுதாகரின் தந்தை சுமன், பேசின்பாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், நண்பர்களுடன் மது அருந்தி ஊர் சுற்றி வந்த சுதாகர், சில நாட்களாக திருந்தி உள்ளார்.
நேற்று முன்தினம், வேலை முடித்து வந்த போது, நண்பர் சுதேசி என்பவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல சென்றுள்ளார். அப்போது, மது அருந்தச் சொல்லிய நண்பர்களுக்கும், சுதாகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அவர்கள், சுதாகரை தாக்கியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சுதாகரை தாக்கிய ஜாய் அஜய், 21 சுதேசி, 19, மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் நேற்று கைது செய்தனர்.