/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெசன்ட் நகர் வேளாங்கண்ணி சர்ச் பொன்விழா * செப்., 8 வரை போக்குவரத்தில் மாற்றம்
/
பெசன்ட் நகர் வேளாங்கண்ணி சர்ச் பொன்விழா * செப்., 8 வரை போக்குவரத்தில் மாற்றம்
பெசன்ட் நகர் வேளாங்கண்ணி சர்ச் பொன்விழா * செப்., 8 வரை போக்குவரத்தில் மாற்றம்
பெசன்ட் நகர் வேளாங்கண்ணி சர்ச் பொன்விழா * செப்., 8 வரை போக்குவரத்தில் மாற்றம்
ADDED : ஆக 29, 2025 10:22 PM
சென்னை, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி சர்ச் பொன்விழா கொண்டாட்டம் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இந்த விழா செப்., 8 வரை நடைபெற உள்ளதால், தேவைக்கேற்ப, ஆக., 31, செப், 1, 7, 8 ஆகிய நாட்களில் போக்குவரத்து மாற்றப்படும் என, போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
* திரு.வி.க., பாலத்திலிருந்து பெசன்ட் அவென்யூ சாலை வழியாக, பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள், ஆவின் பூங்காவில் இருந்து தடை விதிக்கப்பட்டு, எல்.பி.,சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்
* ஏழாவது அவென்யூ மற்றும் எம்.ஜி., சாலை சந்திப்பிலிருந்து, அன்னை வேளாங்கண்ணி சர்ச் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது
* எம்.எல்., பூங்காவிலிருந்து பெசன்ட் அவென்யூ வழியாக, பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தை நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் தடைசெய்யப்பட்டுள்ளன
* எல்.பி., சாலையில் இடதுபக்கம் திரும்பி சாஸ்திரி நகர், 1வது அவென்யூ வழியாக சென்று, வலது பக்கம் திரும்பி சாஸ்திரி நகர், 1வது பிரதான சாலை செல்ல வேண்டும். இடது பக்கம் திரும்பி எல்.ஜி.,சாலை வழியாக சென்ற, இடதுபக்கம் திரும்பி பெசன்ட்நகர், 1 வது பிரதான சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடையலாம்
* பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூர் மற்றும் அடையாறு சிக்னல் நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் பெசன்ட் நகர், 1வது அவென்யூ வழியாகத் திருப்பிவிடப்படும். அவை, இடது புறம், சாஸ்திரி நகர், 1வது பிரதான சாலை வழியாக சென்று, பின் வலதுபுறம் திரும்பி, எல்.ஜி.,சாலை, எல்.பி., சாலை வழியாக செல்லலாம்.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறு, காவல் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.