/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கண் தான விழிப்புணர்வு செப்., 8 வரை நடைபயணம்
/
கண் தான விழிப்புணர்வு செப்., 8 வரை நடைபயணம்
ADDED : ஆக 29, 2025 10:21 PM
சென்னை :தேசிய கண் தான தினம் செப்., 8ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, திருவான்மியூர் அரிமா சங்கம், ஸ்ரீசங்கரா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி மற்றும் சென்னை சங்கர நேத்ராலயா கண் வங்கியும் இணைந்து, கண் தான விழிப்புணர்ச்சி நடைபயணத்தை திருவான்மியூரில் மேற்கொண்டன.
இதில், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அரிமா கண் வங்கி தலைவரும், அரிமா மாவட்ட '3241 - சி-'ன் ஆளுநருமான போஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருவான்மியூர் அரிமா சங்க தலைவர் ரவிச்சந்திரன், அவரது மனைவி வித்யா, அரிமா உறுப்பினர் மணிகண்டன், வட்டார தலைவர் அருண்குமார், அரக்கோணம் அரிமா சங்க ரவிச்சந்திரன், சங்கர நேத்ராலயா கண் வங்கியின் பொறுப்பாளர் லக்ஷ்மி நாராயணன் ருத்ரேஷ், அரிமா மாவட்ட தலைவர் பத்மநாபன், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். விழிப்புணர்வு நிகழ்ச்சி, வரும் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.