/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீர்த்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
தீர்த்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஆக 29, 2025 10:21 PM

குன்றத்துார் பரணிபுத்துார் தீர்த்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விழா, நேற்று விமரிசையாக நடந்தது.
பரணிபுத்துாரில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், அண்மையில் புனரமைக்கப்பட்டது.
இதையடுத்து, கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா 27ம் தேதி விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
இதைத்தொடர்ந்து, நான்கு கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று காலை கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து மாலை பிரசன்ன விநாயகர் ஆலயத்தில் இருந்து தீர்த்தீஸ்வரர் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்து செல்லப்பட்டு, திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு சுவாமி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.