/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரே நாளில் 120 வீடுகள் ஒப்படைத்தது 'பாஷ்யம்'
/
ஒரே நாளில் 120 வீடுகள் ஒப்படைத்தது 'பாஷ்யம்'
ADDED : நவ 22, 2025 04:03 AM
சென்னை: பாஷ்யம் கட்டுமான நிறுவனம், அக்., 30ல், 'பீக் ப்ராஜக்ட்' திட்டத்தின் கீழ், ஒரே நாளில் 120 குடியிருப்புகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளது.
பாஷ்யம் கட்டுமான நிறுவனம், அசோக் நகரில், 'பீக் ப்ராஜக்ட்' எனும் பெயரில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டியுள்ளது.
இந்த திட்டம் ஆடம்பரம் மற்றும் நவீன வசதிகள் இணைந்த அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, 240 குடியிருப்புகளை கொண்டது.
கடந்த அக்., 30ல் ஒரே நேரத்தில் 120 குடியிருப்புகளை, வீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்து உள்ளது.
இந்த திட்டத்தில் கூடுதல் சிறப்பம்சமாக, குடியிருப்பாளர்களின் வாழ்க்கை முறையை உயர்த்தும் வகையில், பிரத்யேக கிளப் ஹவுஸ் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி மையம், உள்ளரங்கு விளையாட்டு பகுதி, மல்டிபர்பஸ் ஹால் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகள் அடங்கும்.

