ADDED : நவ 22, 2025 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை நவ. 22-: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலை சார்பில், 'இணைப்பு' என்ற தலைப்பிலான ஓவிய கண்காட்சி, கோபாலபுரத்தில் நேற்று துவங்கியது.
பத்து நாட்கள் கண்காட்சியை, நடிகை ரேவதி, ஓவியர் பகவான் சாவான் மற்றும் சிற்பக் கலைஞர் கருணா மூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பல்கலை மாணவ - மாணவியர், 18 பேர் வரைந்த, பெண்களின் வீரம், சிந்தனையை மையப்படுத்தும் வகையில் இடம் பெற்றுள்ள, 100க்கும் மேற்பட்ட ஓவியங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
வரும் 30ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியை, பொதுமக்கள் காலை 10:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை பார்வையிடலாம்; அனுமதி இலவசம்.

