/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவனிடம் சில்மிஷம் பீஹார் நபர் கைது
/
சிறுவனிடம் சில்மிஷம் பீஹார் நபர் கைது
ADDED : அக் 23, 2025 12:44 AM
சென்னை: மயிலாப்பூரைச் சேர்ந்த, 42 வயது பெண், அழகுகலை நிபுணராக உள்ளார். இவரது, 6 வயது மகன் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இரு நாட்களுக்கு முன் சிறுவன், அவரது பாட்டி வீட்டிற்கு சென்றபோது அங்கு வாடகைக்கு வசித்து வந்த, 41 வயது நபர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுவன் அவரது தாயிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் சிறுவனின் பெற்றோர், சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை நையபுடைத்து, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திர தாகூர், 41, என்பதும், சென்னையில் முடி திருத்தம் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

