/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரக்கோணம் - சென்ட்ரல் ரயில் சேவை பாதிப்பு
/
அரக்கோணம் - சென்ட்ரல் ரயில் சேவை பாதிப்பு
ADDED : அக் 23, 2025 12:45 AM

கடம்பத்துார்: கடம்பத்துார் அருகே சிக்னல் கோளாறால், அரக்கோணம் - சென்னை ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, அரக்கோணம் வரை, தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் சென்று வருகின்றன. நேற்று மதியம் 12:15 மணியளவில், கடம்பத்துார் அடுத்த ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக, அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கமாக இயக்கப்படும் ரயில்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வந்த ரயில்களும், ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, பின் ஒவ்வொரு ரயிலாக இடைவெளி விட்டு மாற்று பாதையில் இயக்கப்பட்டன.
இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டனர். தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், சிக்னல் கோளாறை சரிசெய் யும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மதியம் 1:15 மணிக்கு சிக்னல் சரிசெய்யப்பட்டு, ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.