/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடிகர் பிரபுவின் உறவினர் வீட்டில் திருட முயன்ற இருவர் சிக்கினர்
/
நடிகர் பிரபுவின் உறவினர் வீட்டில் திருட முயன்ற இருவர் சிக்கினர்
நடிகர் பிரபுவின் உறவினர் வீட்டில் திருட முயன்ற இருவர் சிக்கினர்
நடிகர் பிரபுவின் உறவினர் வீட்டில் திருட முயன்ற இருவர் சிக்கினர்
ADDED : அக் 23, 2025 12:45 AM
-: ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நடிகர் பிரபுவின் உறவினர் வீட்டில், திருட முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
ராஜா அண்ணாமலைபுரம், 1வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் இந்திரஜித். இவர் நடிகர் பிரபுவின் உறவினர். இவரது வீட்டில் சில வாரங்களுக்கு முன், மர்ம நபர்கள் இருவர் முகமூடி அணிந்து திருடுவதற்காக வந்துள்ளனர்.
அப்போது ஆட்கள் யாரும் இல்லை என நினைத்து, சுற்றுச்சுவரை எகிறி குதித்தபோது, ஆட்கள் வந்ததால் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதில், திருட்டு முயற்சியில் ஈடுபட்டது பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ராபர்ட், 20, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வினோத்குமார், 21, ஆகியோர் என்பது தெரியவந்தது. போலீசார் இருவரை நேற்று கைது செய்தனர்.
- நமது நிருபர்