/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
31 கிலோ கஞ்சாவுடன் பீஹார் வாலிபர் கைது
/
31 கிலோ கஞ்சாவுடன் பீஹார் வாலிபர் கைது
ADDED : ஏப் 04, 2025 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார், பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, சூட்கேசுடன் திரிந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அதில், 3.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 31 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.
விசாரணையில், பீஹாரைச் சேர்ந்த சந்திரன்குமார் கேவத், 30, என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, அம்பத்துார் தொழிற்பேட்டை பகுதியில் பணியாற்றும் வடமாநில வாலிபர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.