/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் நாளை நடக்கிறது பைக் மற்றும் கார் சாகச நிகழ்ச்சி
/
சென்னையில் நாளை நடக்கிறது பைக் மற்றும் கார் சாகச நிகழ்ச்சி
சென்னையில் நாளை நடக்கிறது பைக் மற்றும் கார் சாகச நிகழ்ச்சி
சென்னையில் நாளை நடக்கிறது பைக் மற்றும் கார் சாகச நிகழ்ச்சி
ADDED : ஏப் 10, 2025 11:48 PM

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரெட் புள், மொபைல் - 1 ஆகியவை இணைந்து, 'ரெட் புள் மோட்டோ ஜாம் பைக்கர்' சாகச நிகழ்ச்சியை, சென்னை தீவுத்திடல் மைதானத்தில் நாளை நடத்துகின்றன. இந்தியாவில் இது போன்று நடப்பது இதுவே முதல் முறை.
இதில், சீனியர் பைக் ஸ்டன்டரான அரஸ் கிபிஷா, 'கின்னஸ்' சாதனை படைத்த அப்டு பெகாலி, குலுப் ஆகியோர், பல்வேறு அசாத்திய சாகசங்களை நிகழ்த்தி காட்ட உள்ளனர்.
இந்நிகழ்வில், பைக் மற்றும் கார் ட்ரிப்டிங், பிரிஸ்டைல் க்ராசிங் போன்ற த்ரில்லர் சாகசங்களையும் நிகழ்த்தி காட்ட உள்ளனர்.
இதற்கான டிக்கெட், ரெட் புள் மோடோ ஜாம் இணையதளத்தில் விற்கப்படுகிறது. இதற்கான விளம்பர நிகழ்ச்சி, தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று நடந்தது.