/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வீஸ் முடித்து வந்த பைக் தீப்பிடித்து எரிந்து நாசம்
/
சர்வீஸ் முடித்து வந்த பைக் தீப்பிடித்து எரிந்து நாசம்
சர்வீஸ் முடித்து வந்த பைக் தீப்பிடித்து எரிந்து நாசம்
சர்வீஸ் முடித்து வந்த பைக் தீப்பிடித்து எரிந்து நாசம்
ADDED : மார் 16, 2026 05:38 AM

ஆவடி: சர்வீஸ் முடித்து எடுத்து வரப்பட்ட இருசக்கர வாகனம், திடீரென தீப்பற்றி எரிந்து நாசமானது.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், அன்னை பெசன்ட் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 28; தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
தன் 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்ய, இரு நாட்களுக்கு முன், ஒரு மெக்கானிக் கடையில் விட்டார். சர்வீஸ் முடிந்து, நேற்று இரவு வாங்கியுள்ளார்.
அதை வீட்டுக்கு ஓட்டி சென்ற கார்த்திக், வாசலில் நிறுத்திய சில நிமிடங்களில் திடீரென தீப்பிடித்து தெரிந்தது.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். எனினும், இருசக்கர வாகனம் முழுதும், தீக்கிரையானது.