ADDED : செப் 20, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு, சுற்றுலா பஸ் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
சென்னை ஆவடியில் வசித்து வந்தவர் ஹரி கிருஷ்ணன், 32. ஆவடியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஊழியர்.
நேற்று முன்தினம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகாவில் உள்ள சொந்த கிராமத்திற்கு வந்தவர், நேற்று காலை ஆவடி நோக்கி 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் திரும்பினார்.
சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அடுத்த ஆற்காடுகுப்பம் சிவன் கோவில் அருகே, எதிர்திசையில் திருத்தணி நோக்கி சென்ற அரசு சுற்றுலா பேருந்து மீது, ஹரி கிருஷ்ணனின் டூ வீலர் நேருக்கு நேர் மோதியது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.