/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக் திருடி தொடர் வழிப்பறி சூளை சிறுவர்கள் அட்டூழியம்
/
பைக் திருடி தொடர் வழிப்பறி சூளை சிறுவர்கள் அட்டூழியம்
பைக் திருடி தொடர் வழிப்பறி சூளை சிறுவர்கள் அட்டூழியம்
பைக் திருடி தொடர் வழிப்பறி சூளை சிறுவர்கள் அட்டூழியம்
ADDED : ஜூலை 19, 2025 11:20 PM
சென்னை:ஒரே நாளில் நான்கு இடங்களில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட, சூளை சிறுவர்கள் இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.
ஓட்டேரி, கொசப்பேட்டையைச் சேர்ந்த 18 வயது மாணவி, கல்லுாரி முடித்து நேற்று மாலை, ஓட்டேரி பொடி கடை நிறுத்தம் பகுதிக்கு, பேருந்தில் வந்துள்ளார்.
அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு சிறுவர்கள், மாணவியின் மொபைல் போனை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து மாணவி, ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவியின் மொபைல் போன் சிக்னல் வைத்து, போலீசார் விசாரித்து சூளை பகுதியில் பதுங்கியிருந்த இரு சிறுவர்களை கைது செய்தனர். ஒரே நாளில் பல இடங்களில் அவர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
பெரியமேடு, கந்தப்பா தெருவில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை, சிறுவர்கள் திருடியுள்ளனர். அந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு வேப்பேரி செங்கல்வராயன் பாலிடெக்னிக் அருகில், சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 400 ரூபாயை பறித்துள்ளனர்.
பின், புரசைவாக்கம் தானா தெரு அருகே ஒரு பெண்ணிடம் மொபைல் போனுடன் கைப்பை பறித்துள்ளனர்.
அதன்பின், ஓட்டேரியில் நடந்து சென்ற கல்லுாரி மாணவியிடம் மொபைல் பறித்துள்ளனர். மாணவி புகாரை விசாரிக்கும்போது, சிறுவர்கள் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது.
இருவரையும் கைது செய்து, கெல்லிஸ் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

