/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாடியில் பைக் திருடியவர் பூந்தமல்லியில் சிக்கினார்
/
பாடியில் பைக் திருடியவர் பூந்தமல்லியில் சிக்கினார்
பாடியில் பைக் திருடியவர் பூந்தமல்லியில் சிக்கினார்
பாடியில் பைக் திருடியவர் பூந்தமல்லியில் சிக்கினார்
ADDED : ஜூன் 01, 2025 09:56 PM
பாடி,:பாடி பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன், 25. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த 30ம் தேதி இரவு, அவரது 'யமஹா ஆர்15' பைக்கை, வீட்டின் வாசலில் நிறுத்தி விட்டு சென்றார்.
பின், நேற்று முன்தினம் காலை பார்த்தபோது, வீட்டின் வாசலில் நின்றிருந்த பைக் திருடு போனது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த மணிமாறன், கொரட்டூர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதனிடையே, மணிமாறனின் பைக்கை திருடிய நபர், நேற்று முன்தினம் காலை பூந்தமல்லி, நசரத்பேட்டை வழியாக பைக்கில் சென்றபோது, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த நசரத்பேட்டை போலீசாரிடம் பிடிபட்டார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.
அதில், அவர் தஞ்சாவூரை சேர்ந்த முத்துக்குமார், 23, என்பதும், மணிமாறனின் பைக்கை திருடி செல்வதும் தெரிந்தது.
நசரத்பேட்டை போலீசார், முத்துக்குமாரையும், அவரிடமிருந்த 'யமஹா ஆர்15' பைக்கையும், கொரட்டூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். முத்துகுமாரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று நள்ளிரவு சிறையில் அடைத்தனர்.